புஷ்ஷிற்கு எதிராக ஒரு பெரும் பணக்காரர்


இந்தத் தேர்தலில் புஷ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு பெரும் பணக்காரர், பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளவர் தன் பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறார்.புஷ் எதிர்ப்பு இணயதளங்கள் உட்பட புஷ் எதிர்ப்பு இயக்கதிற்கு நன்கொடைகள் கொடுத்துள்ளார். தான் நிறுவியுள்ள அமைப்புகள் மூலம் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா உட்பட உலகின் பல பகுதிகளில் மனித உரிமைகள், சிறைக் கொடுமைகளை தடுத்தல், கல்வி, பண்பாடுஎன பலவற்றில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார். தத்துவ அறிஞரும், அறிவியலின் தத்துவம் குறித்து எழுதியவருமான கார்ல் பாப்பரின் சிந்தனைகளின் தாக்கத்தினை இவர் செயல்பாட்டில் காணலாம். பாப்பர் முன்வைத்த ஒரு முக்கியமான கருத்து ஒபன் சொசைட்டி.

இவர் ஒரு தாராளவாதி, முதலாளித்துவத்தை ஆதரிப்பவர், அதே சமயம் சந்தைப் பொருளாதார அமைப்பின் குறைபாடுகள், உலகமயமாதலினால் ஏற்படும் பாதங்கள் குறித்து எழுதியிருக்கிறார்.இன்றைய உலகில் அமெரிக்கா எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் குறித்தும் எழுதியிருக்கிறார். கவனிக்கப்பட வேண்டியவர் இவர் என்பதில் ஐயமில்லை. இவர் குறித்து மேலும் தகவல்களை இந்த இணையதளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

2 மறுமொழிகள்:

Blogger Badri மொழிந்தது...

சோரோஸ் 'ஏன் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வாக்களிக்கக் கூடாது?' என்று எழுதிய கட்டுரை 'தி ஹிந்து'வில் வெளியானது. மற்ற பல உலக பத்திரிகைகளிலும் வந்திருக்கும்.

சோரோஸ் இப்பொழுது செய்வது நல்லதுதான் என்றாலும் கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரம் முழுவதுமாகச் சிதைந்ததற்கு சோரோஸ் அன்னியச் செலாவணியில் தகிடுதத்தம் செய்ததுமே என்று பலரும் நம்புகின்றனர்.

11:08 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

It is true that the east asian crisis was triggered by the acts of investors and traders in fex and hence soros
might be responsible to some extent but it was IMF and other agencies who made it worse.i understand that once
soros broughtdown the value of pound sterling through his fex dealings in a single day and the
central bank of england had to intervene to avoid further erosion.

6:45 AM  

Post a Comment

<< முகப்பு