ஊடகங்களும், உண்மைகளும் - சில (கேட்கக்கூடாத) கேள்விகள்


டிசம்பர் 13, 2001-அந்தத் தேதியில் இந்திய பாராளுமன்றத்தினை தாக்க முயற்சி செய்யப்பட்டதும், அது தொடர்பாக டெல்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் கிலானி கைது செய்து குற்றம் சாட்டப்பட்டதும், பின்னர் அவர் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம். இந்தக் கட்டுரையில் நிர்மலன்ஷ¤ முகர்ஜி சில கேள்விகளை எழுப்பி, இந்த வழக்கினை ஊடகங்கள் எப்படி சித்தரித்தன, கீலானி குறித்து எத்தகைய பொய்களை பரப்பின என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். "தேசபக்தி" என்பது கண்னை , சிந்தனையை மறைக்கிறதா இல்லை ஊடகங்களுக்கு உண்மையை கண்டறிவதை விட பரபரப்பூட்டும் "செய்தி"களையும், திகில் தரும் தகவல்களையும் தருவதுதான் முக்கியமான "பணி"யாக உள்ளதா என்பதை இதைப் படித்து நீங்கள் முடிவு செய்யலாம்.

இதைப் படித்துவிட்டு இன்றைய தினமலரையும் படியுங்கள். முதல் பக்கத்தில் இரண்டு செய்திகள். போடா போனதால் தீவிரவாதிகள் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாம். மேலும் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் தமிழ்நாட்டில் கைது என்று இன்னொரு செய்தி. அதிலும் தினமலரின் சேட்டை தெரிகிறது.பீதியை ஊட்ட வேண்டும் என்பதற்காக தினமலர் கையாளும் தந்திரங்கள் அதில் வெளிப்படுகின்றன. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்- ஒரு வீச்சரிவாள், மற்றும் செல்போன்கள். இப்படி செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு இப்போதுள்ளமத்திய அரசின் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும், போடாவை நீக்கியது தவறு என்று வாசகர்கள் நினைக்க வேண்டும்.இதுதான் தினமலரின் நோக்கம்.

போடா போனாலும் அரசு ஒரு அவசரச் சட்டம் மூலம் சில நடவடிக்கைகளை எடுப்பதை சாத்தியமாக்கியுள்ளதே. அது குறித்தோ அல்லது வடகிழக்கு இந்தியாவில் உள்ள பிரச்சினைகள் குறித்தோ தினமலருக்கு என்ன அக்கறை. இந்த நாளிதழ் தமிழ் நாட்டில் மிக அதிகமாக விற்கும் நாளிதழ்களில் இரண்டாம் இடத்தில் உள்ளதாம். இப்படிப்பட்ட தினமலர் அரசியல்வாதிகளை குறிப்பாக பா.ம.கநிறுவனர் ராமதாசை விமர்சிக்கிறது. பத்திரிகை என்ற பெயரில் பொய்களையும்,கட்டுக்கதைகளையும்விநியோகம் செய்யும் தினமலர்தான் உண்மையின் முதல் எதிரி.தமிழர்களின் எதிரியும் கூட- ஏனெனில் தமிழைசெம்மொழியாக அறிவித்ததை கிண்டலும், கேலியும் செய்து எழுதுகிறது தினமலர்.

3 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

தினமலருக்கு மிகத்தெளிவான நோக்கமிருக்கிறது. அதை நிறைவேற்ற மிக மலிவான, தொன்றுதொட்டு பயின்று வருகின்ற வழிமுறையை பயன்படுத்துவதில் அதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. அந்த் வழிமுறை, பொய் சொல்வது (திரும்பத்திரும்பக் கூச்சமெதுவும் படாமல் அதைச் சொல்லுதல்), தகவல்களை, வரலாற்றுச் செய்திகளை திரிப்பது, தமிழருக்கெதிரான விதத்தில் வெட்டி ஒட்டுவது, கேலிக்குள்ளாக்குவதன் மூலம் தான் திராவிட கருத்தியல்களை ஒரு குள்ள நரியைப் போல சீண்டுவது, சினிமாவையும் கொச்சையான கிசுகிசுக்களை ஒருபக்கமும், ஆன்மீக வியாபாரத்தை ஒருபக்கமும் கலந்து விற்பது, மூடநம்பிக்கைகளை எல்லாவடிவங்களிலும் கடைவிரிப்பது இவைதான். எத்தனையோ முறை அது பொய்யான செய்திகளைத் தருவது, வாசகர் கடிதமென்ற பெயரில் அதுவே கருத்தியல்களை உண்டாக்குவது போன்றவை வெட்டவெளிச்சமாக்கப்பட்டாலும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் தனது கொண்ட கொள்கையில் (தமிழர்களுக்கு எதிராக செய்ல்படுவது) நிலைத்து நிற்பதை பாரட்டத்தான் வேண்டும்.

5:04 PM  
Blogger காசி (Kasi) மொழிந்தது...

தினமலருக்குப் பாராட்டா? ஹா..ஹா..

9:58 PM  
Blogger Badri மொழிந்தது...

நான் இந்தக் கட்டுரையை PUCL யாஹூ! குழுமத்தில் படித்தேன்.

தினமலர் செய்திகளைத் திரித்து மட்டும்தான் தருகிறது என்பதில் ஐயமில்லை.

தினமலர் கடந்த இரண்டு வாரத்தில் வெளியிட்ட மற்றுமொரு முக்கியச் செய்தி விடுதலைப்புலிகள் போர்ப்பயிற்சி எடுக்கும் சில கேசட்டுகள் சென்னையில் கைப்பற்றப்பட்டிருப்பது. இந்த கேசட்டுகளை இந்தியாவில் உள்ள பல்வேறு தீவிரவாதிகளுக்கும் பிரதி எடுத்துக் கொடுக்க ஒரு முயற்சி நடைபெற இருந்ததாகவும் அதனை சென்னை கஸ்டம்ஸ் தடுத்ததாகவும் செய்தி. வேறு எந்த செய்தித்தாளிலும் வெளியாகாத செய்தி இது. கஸ்டம்ஸ் துறை அதிகாரிகள் யார் பெயரும் மேற்கோளில் கிடையாது.

இந்திய ஊடகங்கள் பொய்ச்செய்திகளை "உருவாக்குவது", உண்மைகளைத் திரிப்பது, மறைப்பது, திசை திருப்புவது, ஆழ சிந்திக்காது அரைவேக்காட்டுத்தனமாக எழுதுவது ஆகியவற்றால் மக்களுக்குப் புரியும் தீமைகள் ஏராளம்.

12:32 AM  

Post a Comment

<< முகப்பு