நீரின்றி அமையாது

எத்தனை பேர் படித்தார்களோ தெரியாது ஆனால் விவசாயம்,நீர் பயன்பாடு குறித்து வைத்தியநாதன், சிவசுப்பிரமணியனுடன் எழுதியுள்ள கட்டுரை கடந்த மாதம் எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லீயில் வெளியாகியுள்ளது.ஜீலை 3 இதழில். தமிழக அரசு சில மாற்றுப்பயிர்களை பரிந்துரைத்துள்ளது. எதிர்கால நீர்த் தேவைகளையும், சாத்தியமாகக் கூடிய விளைச்சலையும் கணக்கில் கொண்டு பயிர்களை பரிந்துரைப்பது நல்லது. நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டு இன்னும் சில நூறு அடிகள் தோண்ட வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது மீண்டும் அதே போல் அதிக நீர் தேவைப்படும் பயிர்களை குறிப்பாக கரும்பு போன்றவற்றை தவிர்த்து விட்டு நீர் அதிகம் தேவையிராத அதே சமயம் பொருளாதார ரீதியாக ஒரளவேனும் லாபம் தரும் பயிர்களை வளர்ப்பது அர்த்தமுள்ளது 1970 களிலிருந்தே பம்ப் செட்கள் மூலம் நிலத்தடி நீரை தொடர்ந்து பயன்படுத்தியதன் விளைவு இன்று கண்கூடாகத் தெரிகிறது.

மின்சாரம் குறித்த மான்யங்கள் பிரச்சினையின் ஒரு பகுதி, நீரை எப்படி பொருத்தமாக பயன்படுத்துவது என்பதில் அக்கறை காட்டியிருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு மோசமாகமாறியிராது.மேலே குறிப்பிடுள்ள கட்டுரை சில தகவல்களை தருகிறது. அதன் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைக்க முடியும்.

தமிழக அரசின் யோசனைகளை ஒரு நீண்ட காலக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.மீண்டும் மீண்டும் அரிசி, கரும்பு என்று பயிரிட வேண்டியதில்லை. மாற்றுப்பயிர்களை ஏற்கும் விவசாயிகளுக்கு அரசு சில சலுகைகளை வழங்கலாம். இன்று நாம் அரிசியையும், சர்க்கரையும் விலை கொடுத்து பிற மாநிலங்களிடமிருந்து பெறலாம். எனவே இந்தப் பிரச்சினையை உணர்வு பூர்வமாக மட்டும் அணுகாமல் யதார்த்த ரீதியாகவும் அணுக வேண்டும்.
தொடரும்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு