சேது சமுத்திர திட்டமும், சுற்றுச்சூழலும்

இந்த திட்டம் பல பத்தாண்டுகளாகப் பேசப்பட்டு வந்த ஒன்று.இப்போதுள்ள அரசு இதை நிறைவேற்ற நிதி ஒதுக்கும் என்று தோன்றுகிறது. இரண்டு கழகங்களும் இதில் காட்டும் அக்கறை இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இதனால் விளையவிருக்கும் நன்மைகள் குறித்து விலாவரியாகப் பேசப்பட்டுள்ளது.

ஆனால் இது அப்பகுதியிலுள்ள சுற்றுச்சூழலை பாதிக்குமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது,மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகள், அபூர்வ கடல் உயிரினங்கள் இதனால் பாதிக்கப்படலாம். மேலும் அதிகப்படியான கடல் போக்குவரத்து சூழலை இன்னும் மாசுபடுத்தக்கூடும்.இது குறித்து மேல் விபரங்கள் தேவை. ஆனால் இந்த அம்சம் குறித்து அக்கறைக்காட்டப்படுவதாகத் தெரியவில்லை.

இது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் முன் திட்ட வரைவின் போதே ஒரு முதல்கட்ட சூழல் தாக்கம் குறித்த ஆய்வு செய்யப்பட வேண்டும்.அவ்வாறு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பாதகமான அம்சங்களை விட நன்மைகள்தான் அதிகம் என்பதால் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று திட்டங்களை நிறைவேற்றுவது இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஒன்று. இது
இதிலும் தொடராது என்று எதிர்பார்க்கலாமா?

http://www.sanctuaryasia.com/takeaction/writeltr_mannar.php

1 மறுமொழிகள்:

Blogger Suren மொழிந்தது...

சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் இலங்கையின் யாழ் மற்றும் மன்னார் கரையோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம் என்று பத்திரிகையில் படித்தேன். முழுமையான விபரங்கள் தெரியவில்லை.

7:47 PM  

Post a Comment

<< முகப்பு